×

சோனியாவிற்கு சர்ப்ரைஸ் நாய்க்குட்டி நூரியை பரிசளித்த ராகுல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அங்கு ஜாக் ரஸ்ஸல் டெரியர் வகையை சேர்ந்த நாய்க்குட்டியை ராகுல் வாங்கினார். இந்த நாய்குட்டிக்கு ‘நூரி’ என பெயரிட்டுள்ள ராகுல் காந்தி இதனை சமீபத்தில் தனது தாய்க்கு பரிசளித்துள்ளார். உலக விலங்குகள் தினமான நேற்று இதுகுறித்த வீடியோவை ராகுல்காந்தி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள் ளார். இதில், ‘‘எங்கள் குடும்பத்தின் புதிய மற்றும் அழகான உறுப்பினரான ‘நூரி’யை நீங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிபந்தனையற்ற அன்பு மற்றும் சமரசமற்ற விசுவாசம். இந்த அழகான விலங்கு நமக்கு கற்பிக்கக்கூடியது எவ்வளவோ இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் பரிசு பொருளை (நாய்) வெளியே வைத்துவிட்டு அவரது தாயை , ஒரு சிறிய சர்ப்ரைஸ், வெளியே வந்து பாருங்கள் என ராகுல் அழைக்கிறார். வெளியே வரும் சோனியா அந்த பரிசு பொருளை பிரிக்கும்போது அதில் இருக்கும் நூரியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ராகுலுக்கு நன்றி கூறும் அவர் நூரியை தனது கைகளில் தூக்கி விளையாடுவதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

The post சோனியாவிற்கு சர்ப்ரைஸ் நாய்க்குட்டி நூரியை பரிசளித்த ராகுல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Noori ,Sonia ,NEW DELHI ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,Goa ,Jack… ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...